ஓரின சேர்க்கையில் பல வகைகள் உள்ளன. ஆனால் அதனை ஒரு ஆணும் இன்னொரு ஆணும் பண்ணுவது, அல்லது ஒரு பெண்ணும் இன்னொரு பெண்ணும் பண்ணுவது என பொதுவாகப் பார்ப்பர். அதாவது ஆணுக்கு ஆண் மேலும், பெண்ணுக்கு பெண் மேலும் ஏற்படும் ஈர்ப்பினால் உருவாகும் உறவுகளை ஓரினச்சேர்க்கை(Same Sex) எனலாம். ஆணுக்கு பெண் மேலும், பெண்ணுக்கு ஆண் மேலும் ஏற்படும் ஈர்பினால் உருவாகும் உறவுகளை எதிர்பாலினச் சேர்க்கை (Opposite Sex) என கருதுவர். மதங்கள் ஓரினச்சேர்க்கையை தவறான ஒன்றாகக் கருதினாலும், சமூகம் அதனை இயற்கைக்கு எதிரான உறவாக கருதினாலும், அது உண்மை அல்ல. எல்லாமே இயற்கையின் தெரிவுகளே ஆகும். காண்டத்தைக்(ஆணுறை) கண்டுபிடிக்க வைத்த சக்தியால் கூட அதனைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்க முடியவில்லை. அதனால் இன்றும் சனத்தொகை உலகளாவிய ரீதியில் அதிகரித்த வண்ணமே உள்ளது. அதனைக் கட்டுப்படுத்த இயற்கையே உருவாக்கிய பொறிமுறையாக ஏன் இதனைப் பார்க்கக் கூடாது? ஆண்களை ஆண்களும் ரசிக்கலாம்! ஆர்ப்பாட்டமில்லா எளிய ஆண்மை எப்போதும் அழகு தான்! கருமையுமல்லாது வெளுப்புமல்லாத அழகு நிறம்! அடர்ந்த பட்டுப்போல கேசம்! கருமை தோய்ந்த உதடுகள் தழுவும் மீசை! கன்னம் படர்ந்...
a blog to understand the Tamil Gay, Bisexual and LGBT lifestyle around the World. Explore the ways to communicate with Tamil Homosexual Friends, and Life Partner Searching Platforms online. Even though it is made for Gays and Bisexual Men, it is not limited to them. We stand against Homophobia, Biphobia, Transphobia.