Love is Love, காதலுக்கு பால் நிலை இல்லை. கலவியைத் தாண்டி ஒரு நல்ல நட்பையும் உங்களுக்காக வாழ்க்கைத் துணையையும் தேடிக்கொள்ள, வழி காட்டியாக உருவாக்கப்பட்ட தளம் தான் Tamil Gay Lifestyle.
வெறும் செக்ஸ்க்காக ஆண்களைத் தேடியது போதும்! செக்ஸ் மட்டும் தான் வாழ்க்கையா? இந்தத் தளத்தின் வழிகாட்டுதலுடன் நீங்கள் தேடிக் கொள்ளும் நண்பர்களுடனான செக்ஸ் வாழ்க்கையை எவ்வளவு தள்ளி போட முடியுமோ அவ்வளவு தள்ளிப் போடவும்.
முதலில் நல்ல புரிதலை இருவருக்குள்ளும் உருவாக்குங்கள் அதன் மூலம் மட்டுமே ஒரு உண்மையான காதலை மலர வைக்க முடியும்.
உங்கள் மருத்துவ நிலைமைகள் பற்றிய போதிய அறிவு இல்லாமல் எக்காரணம் கொண்டும் ஆணுறை இன்றி கலவியில் ஈடுபடாதீர்கள்.
இங்கு நீங்கள் சந்திக்கும் புதிய நபர்களிடம் உங்கள் அன்பின் ஆழத்தைப் பாருங்கள்! அவர்களின் ஆண்குறியின் நீளத்தைப் பார்க்காதீர்கள்.
செக்ஸ்க்காக மாத்திரம் பழகும் நபர்களை இனங்காண்பது எப்படி?
1. உங்களுடன் முகம் தெரியும் வகையில் Selfie/புகைப்படம் எடுக்க மாட்டார்கள்.
2. உதோடோடு உதடு வைத்து முத்தம் கொடுக்க தயங்குவார்கள்
3. முதல் முறை சந்திக்கும் போது பொது இடத்தில் சந்திக்க விரும்ப மாட்டார்கள்.
4. யாரிடமும் உங்களை நண்பனாகக் கூட அறிமுகம் செய்ய மாட்டார்கள்.
5. அவர்களின் Main Phone Number யை உங்களுடன் பகிர மாட்டார்கள்.
Comments
Post a Comment