தன்னினச் சேர்க்கையாளர்கள் ஒரு Straight பெண்ணை அவ்வளவு எளிதில் திருமணம் செய்து கொள்ளமாட்டார்கள். Gay/Bisexual ஆண்களின் வீட்டில் திருமணப் பேச்சை ஆரம்பிக்கும் போதே அவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது போன்ற நிலைமை ஏற்பட்டு விடும்.
ஓர் ஆணுக்கு கிடைக்குற மதிப்பும் மரியாதையும் அவனுக்கு பொண்டாட்டி புள்ளை குட்டிங்க எல்லாம் இருக்கான்னு பார்த்துட்டுத்தான் இந்த சமூகம் நமக்குத் தருது. குறிப்பிட்ட வயதை தாண்டும் வரை தலைவலி தான். நாம தான் எல்லோரும் நம்ம சொந்தம்ன்னு பைத்தியக்காரத்தனமா நம்பிட்டு இருக்கோம். அவங்க நம்மோட வாழ்க்கைல இருக்குற நெகட்டிவ் மட்டும் தான் பார்க்குறாங்க. அதுக்குப் பின்னாடி இருக்குற தியாகங்களை பார்க்குறது இல்ல. ஒரு சில அனுபவசாலிகளின் சோக கதையை கேட்ட பிறகுதான் புரிகிறது Bisexual Guys மட்டும் இல்லாம பல Gays கூட சமூகத்துக்காக ஒரு கல்யாணம் பண்ணிட்டு, யாருக்கும் தெரியாத நிழல் வாழ்க்கையை ஏன் வாழுறாங்கன்னு.
நமது சமூகத்தில் உள்ள ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடுள்ள ஆண்கள் சந்திக்கும் மிகப்பெரிய உளப்பிரச்சனையே, அவர்களின் குடும்பத்தாருக்கு தமது உணர்வுகளை புரிய வைப்பது தான். என்ன தான் தலைகீழாக நின்றாலும் சில நேரங்களில் கட்டாயக் கல்யாணமாவது Gay/Bisexual ஆண்களுக்கு வீட்டில் செய்து வைத்து விடுவார்கள்.
Gay/Bisexual ஆண்களும் சரி, ஒரு Lesbian பெண்ணும் சரி Straight நபரை திருமணம் செய்து கொள்ள முன்னர் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே பிரச்சனையில் உள்ள உங்கள் வாழ்க்கையில் பத்தோட பதினொன்னாக, இன்னொரு பிரச்சனையாக உங்கள் குடும்ப வாழ்க்கையும் சேர வேண்டுமா?
Sexual Orientation என்பது ஒருவரது பால் நிலை(Gender) அல்ல. உங்களுக்கு ஆண்கள் மீதும் பெண்கள் மீதும் ஈர்ப்பு ஏற்படலாம். ஆனால் யார் மீது உங்களுக்கு காதல் ஏற்படுகிறதோ அவரை திருமணம் செய்து கொள்ள தயங்கக் கூடாது.
Lesbian பெண்களால், ஒரு ஆண் மீது இனக்கவர்ச்சி ஏற்படாவிட்டாலும் கூட Straight ஆண்யை அனுபவிக்க முடியும். அவருடன் கலவியில் ஈடுபட்டு குழந்தை கூட பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் Gay/Bisexual ஆண்களுக்கு அப்படியல்ல. ஒரு பெண்ணின் பெண்குறியினுள் ஆண்குறியை நுழைப்பதற்கு ஆண்குறி முழுமையாக விறைப்படைய வேண்டும். அதற்கு அந்தப் பெண்ணுடன் உங்களுக்கு கலவியில் ஈடுபட விருப்பம், அந்தப் பெண்ணின் மீது இனக்கவர்ச்சி ஏற்பட வேண்டும்.
திருமணம் செய்வதே உடல் பசியைத் தீர்த்துக் கொள்வதற்குத் தான். அந்த அடிப்படை தேவையைக் கூட உங்களுக்கு அந்த பெண்ணிற்கு செய்ய முடியாவிட்டால் தயது செய்து ஒரு Straight பெண்ணை திருமணம் செய்வது குறித்து ஒன்றிற்கு பல முறை யோசிக்கவும்.
Recommended: Gay/Bisexual ஆண்களால் ஒரு குழந்தைக்கு தந்தையாக முடியுமா? அவர்களால் பெண்களை கர்ப்பமாக்க முடியுமா?
Gay ஆண்களை தவிர்த்து Bisexual ஆண்களை மாத்திரம் எடுத்துக் கொண்டால் Bisexual ஆண்களுக்கு தேர்வு செய்ய இரண்டு வழிகள் இருக்கும். பூ பாதையா? சிங்கப்பாதையா? அதை உங்கள் ஆண்குறியின் எழுச்சியை வைத்தும், உங்களுக்கு பெண்களின் மீது ஈர்ப்பு ஏற்படும் அளவை வைத்தும் முடிவு செய்யவும்.
Gay ஆண்களுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்க வீட்டார் முடிவு செய்தால், அவசியம் ஒரு முறை அந்தப் பெண்ணை சந்தித்துப் பேசவும். அவர் உங்களைப் புரிந்து கொண்டால், ஊருக்காக ஒரு கல்யாணத்தை செய்து கொண்டு, உங்கள் இஷ்டம் போல வாழலாம். அதற்காக மனைவியை பாலியல் ரீதியாக திருப்திப்படுத்த Straight/Bisexual ஆண்களைத் தேடி, நீங்களும் அவரை அனுபவித்து கணவனும் மனைவியுமாக சேர்ந்து விபச்சாரம் செய்ய வேண்டாம்.
Suggestions: Gay, Bisexual ஆண்கள் Lesbian பெண்களை ஊர், உலகத்திற்காக திருமணம் செய்து கொள்ள முடியும். இதனை அழகாக Badhaai Do(2022) Hindi திரைப்படத்தில் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.
"நீ போகும் தெருவில்… ஆண்களை விட மாட்டேன்… சில பெண்களை விட மாட்டேன்…" என்று 1996 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியன் திரைப்படத்தில் Lesbian உறவு பற்றி கவிஞர் வைரமுத்து கவிதையாகவே சொல்லி விட்டார். மனுஷன் அப்பவே ஓரினச்சேர்க்கை பற்றி தெரிந்து வைத்திருந்திருக்கார்.
Suggestions: குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமையால், Sex குறைபாடுகளால் விவாகரத்து ஆன, அல்லது திருமணம் செய்து கொள்ளாத பல ஆண்களும், பெண்களும் இந்த சமூகத்தில் உள்ளனர். அவர்களை நீங்கள் வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்தால், அவர்கள் வாழ் நாள் முழுதும் உங்களுக்கு நல்ல நண்பர்களாகவும் வாழ்க்கைத் துணையாகவும் இருப்பர்.
Suggestions: உங்களால் உங்கள் குடும்பத்தினரிடம் உண்மையைச் சொல்ல முடியாவிட்டால்(Coming Out), அவர்களிடம் நீங்கள் ஆண்மையற்றவர்(Impotent) என்று பொய் சொல்லலாம். உங்களால் ஒரு குழந்தைக்கும் தந்தையாக முடியாது எனலாம். ஆம்பளையும் பொம்பளையும் கல்யாணம் பண்ணுறதே குழந்தை பெற்றுக் கொள்ளத்தானே!
உங்கள் கணவர் தன்னினச் சேர்க்கையாளரா? உங்கள் கணவர் ஓரினச்சேர்க்கையாளரா? உங்கள் கணவர் ஒரு Gay யா? அல்லது உங்கள் கணவருக்கு ஆண்களுடன் பாலியல் ரீதியான தொடர்பு உள்ளதா? உங்கள் கணவர் ஒரு Bisexual ஆணா? உங்கள் கணவர் ஆணுடனும் பெண்ணுடனும் உடலுறவு கொள்ளக் கூடியவரா? உங்கள் கணவன் ஆம்பள கூடவும், பொம்பள கூடவும் செக்ஸ் வைத்துக் கொள்பவரா?
உங்களுக்கு தற்கொலை பண்ணிக்கொள்வது தான் தீர்வா? நிச்சயமாக இல்லை. அவரை விவாகரத்து செய்து விட்டு, வேறு ஒரு ஆண்யை திருமணம் செய்து கொள்ளுங்கள்.
உங்கள் கணவன் உங்களை வேறு ஆணுடன் உடலுறவு கொள்ள நிர்பந்திக்கிறாரா? அல்லது அனுமதிக்கிறாரா? அதுக்கு பெயர் Cuckold. அதற்கும் ஓரினச்சேர்க்கை/தன்னினச்சேர்க்கைக்கும் தொடர்பு இல்லை.
Sexual Orientation ஒருவருடைய தனிபட்ட விருப்பு வெறுப்பு சார்ந்தது. ஒருத்தர் என்ன மனநிலைல இருக்கார்ன்றது தெரியாம குடும்ப வாழ்க்கையில ஈடுபட வைக்கிறதே தப்புதான்! இந்த மனநிலை எப்படினா அசைவ சாப்பிடுறவனை சைவம் சாப்டுகிறவர்கள் அசூயையா பார்ப்பது போல தான்.
உலகம் முழுக்க கலந்து இருக்குற ஒரு விஷயத்தை சரியாக கையாள தெரியவில்லை என்றால் அது நம் முட்டாள்தனம். மறுமணம் ஒரு காலத்தில் Abnormal விஷயம் தான். ஆனால் அந்தக் காலத்தில் உடன்கட்டை ஏறுதல் Normal விஷயம். ஆனால் அதை நான் இப்போ ஆதரித்து பேசுனா நீங்க ஒப்பு கொள்வீர்களா?
இதுக்கு தான் LGBTQ வை நோர்மலைஸ் பண்ண சொல்றாங்க. அதாவது இயல்பான ஒன்றாக எடுத்துக் கொள்ள சொல்கிறார்கள். இதுவே அவன் தன்னோட விருப்பத்தை செய்யக்கூடிய இடத்தில இருந்தால், சமூகம் அதை சாதாரணமா பாத்திருந்தால், அவன் ஒரு Straight பெண்ணை கல்யாணம் பண்ணியிருக்க மாட்டான்.
ஆணும், பெண்ணும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது தவறில்லை. தன்னினச்சேர்க்கை என்றால் என்ன? ஒரு விரிவான விளக்கம் தமிழில்
Keywords: நம் சமூகத்தால் தன்னினச்சேர்க்கையாளர்களுக்கு நடாத்தி வைக்கும் கட்டாய திருமணம்


Comments
Post a Comment