Skip to main content

Translate Blog

Gay, and LGBT ஆண்களுக்கான தொழில் முயற்சி

ஒரு ஆண்யை இன்னொரு ஆனால் தான் புரிந்து கொள்ள முடியும். அதிலும் Gay, and LGBT, அதாவது ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆண்களுக்குத்தான் ஒரு ஆணுக்கு என்ன தேவை என்பதைப் புரிந்து நடக்க முடியும். 

இவ்வாறான இயல்புடையை ஓரினச்சேர்க்கையாளர்கள் எவ்வாறான தொழிலை தமது வாழ்க்கையில் ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் அவர்களது வாழ்வை முன்னேற்றிக் கொள்ளலாம்? இந்த அறிவுரை நன்றாகப் படித்து முன்னேறும், முன்னேறிய ஆண்களுக்கு அல்ல.

Job Guide for Gay and LGBT Tamil Men

Gay, and LGBT ஆண்கள், ஆண்களின் தேவையைப் புரிந்து நடக்கக் கூடியவர்களாகையால், ஆண்களின் தேவை சார்ந்த தொழிலைத் தெரிவு செய்வது நல்லது. அதற்காக பாலியல் தொழிலில் ஈடுபடச் சொல்லவில்லை.

ஆண்களிடம் எவ்வாறான தேவை இருக்கிறது? அதனை எப்படி பூர்த்தி செய்வது?

1. சலூன் கடை ஒன்றை ஆரம்பிக்கலாம், அல்லது வீட்டிற்கே வந்து சவரம் செய்து விடும், அல்லது தலை முடி வெட்டி விடும் சேவையை ஆரம்பிக்கலாம். முடி திருத்துனர்/ஆண்களுக்கான அழகுக் கலை நிபுணர் ஆவது சிறப்பாக இருக்கும்.

2. துணிக்கடை, அதாவது ஆண்களுக்கான ஆடைகளை விற்பனை செய்யும் கடை ஒன்றை ஆரம்பிக்கலாம். அதிலும் குறிப்பாக ஆண்களுக்கான உள்ளாடைகள்/லுங்கி மற்றும் சாரம் விற்பனையை Gay, and LGBT ஆண்களால் சிறப்பாக செய்ய முடியும்.

3. ஆண்களுக்கான டெய்லர். என்ன தான் ready made ஆக ஆடைகளை வாங்கக் கூடியதாக இருந்தாலும் இன்னமும் Office Wear/Dress Shirt and Dress Pant/Suit/Wedding Dress போன்றவற்றை தைப்பதற்கு ஆண்கள் Tailor ரையே நாடுகின்றனர். ஒரு ஆண்யைப் புரிந்து கொள்ளக் கூடியவனால் அவன் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்யக் கூடியவகைல் அவனுக்கான ஆடையை தைக்க முடியும்.

4. Bus Terminal, Railway Station யை அண்டிய பகுதிகளில் சிறிய இரவு நேர/அதிகாலை உணவு விடுதிகளை/சிற்றுண்டி விற்பனை நிலையங்களை, சிறிது நேரம் தங்கிச் செல்லும் அறைகளை, பொது குளியலறை/Public Toilets போன்றவற்றை ஆரம்பிக்கலாம்.

5. உங்கள் ஏரியாவில் சற்று ஒதுக்குப் புறமான இடங்களில் குளியலறைகளுடன் கூடிய Gym/உடற்பயிற்சி கூடங்களை ஆரம்பிக்கலாம்.

6. உங்கள் ஏரியாவில் சிறுவர்கள் முதல் வயதுக்கு வந்த ஆண்களுக்கான நீச்சல் தடாகத்தை உருவாக்கி, நீச்சல் பயிற்சி வழங்கலாம்.

7. ஆண்களுக்கான Oil மசாஜ் Centers.(பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யாத)

8. இரவு நேர வண்டி ஓட்டுனர்கள். அதாவது ஆட்டோ/Taxi சேவை வழங்குனர்கள். மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை.

9. ஆண்களுக்கான Beer Bars. பியர் மாத்திரம் பரிமாறும் இரவு நேர மதுபான சாலைகள்.

10. நகரத்தின் முக்கியமான இடங்களில் இடவசதி இருந்தால் ஆண்களுக்கான ஹாஸ்டலையும்(Shared Rooms/Shared Bathrooms) உருவாக்கலாம்.

11. ஏதாவது ஒரு துறைசார் அனுபவம்/அறிவு இருந்தால் அதனை வைத்து YouTube Channel ஆரம்பித்து படிப்பிக்கலாம். Men Fashion/Fitness/Cooking சார்ந்த YouTube Channel களுக்கு ஆண்களிடம் அதிக வரவேற்பு உள்ளது.

12. உங்கள் உடலை, அறிவை, திறமையை மூலதனமாக பயன்படுத்த விருப்பமா? நீங்களும் ஒரு Social Media Influencer ஆகலாம்.

இவ்வாறான ஆண்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் தொழிலில் ஈடுபடும் போது உங்களுக்கு Sexual Tension ஏற்படுவது சகஜம் தான். ஏன் சில Bisexual ஆண்கள் உங்களை சீண்டி Sexual Harassment/Abuse கூட செய்யலாம். ஆனால் அவ்வாறான சந்தர்ப்பங்களில் சுய நினைவுடன் இருப்பது நல்லது. தொழில் செய்யும் இடத்தில் பாலியல் ரீதியான செயற்பாடுகளை/சேவைகளைத் தவிர்க்கவும். Learn to Say No!

அதே நேரம் தனி ஒருவனாக இதனைச் செய்வதை விட சில நண்பர்கள் ஒன்றினைந்து இந்தத் தொழிலை ஆரம்பிக்கலாம்.

ஒரு தொழிலை ஆரம்பிக்க முன்னர் அனுபவமோ அல்லது அதுபற்றிய அறிவோ இல்லாவிட்டால் சிறுது காலம் சில இடங்களில் வேலை செய்து அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

எக்காரணம் கொண்டும் ஜட்டி அணியாமல் கமெரா முன்னிலையில் நிற்க வேண்டாம். தற்காலத்தில் Fitness, Modeling இல் ஈடுபாடு அதிமாக இருக்கும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு உள்ள வட இந்திய ஆண்களை தவறாக Porn Video எடுக்கும் நிறுவனங்கள் வழி நடத்துகின்றன.

உங்களிடம் Gay, and LGBT ஆண்களுக்கு தொழில்வாய்ப்புக்கள் இருந்தால் அது தொடர்பான விபரத்தை கீழே Comment செய்யவும்.

நீங்கள் சுய தொழில்(Entrepreneur) செய்யும் நபராக இருந்தால் உங்கள் தொழில் அல்லது விற்பனை செய்யும் பொருட்கள், சேவைகள் தொடர்பான விபரங்களையும் கீழே Comment செய்யவும்.

உங்களிடம் இருக்கும் யோசனைகளையும் கீழே Comment செய்யவும்.

Comments

Popular posts from this blog

ஏன் ஒரு உறையில் இரண்டு கத்திகள் இருக்க கூடாது?

 "ஒரு உறையில் இரண்டு கத்திகள் இருக்க கூடாது" எனும் வாக்கியத்தின் பாவனையை தமிழ் திரைப்படங்களில், ஓரினச்சேர்க்கை தொடர்பான காமெடிகளில் நீங்கள் அவதானித்திருக்கலாம். இதன் நேரடிப் பொருளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை. ஒரு உறை என்பது ஒரு பொருளுக்கு மட்டும் தான். உதாரணம். கத்தி, தலையணை.

உண்மையான காதல் முன் Top vs Bottom vs Versatile பேதம் ஏது?

பொதுவாக ஆணுக்கும் ஆணுக்கும் இடையிலான காதல், அதாவது ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு இடையிலான(Gay/Bisexual) காதல்/அன்பினை எடுத்துக் கொண்டால் யார் கணவனாவது? யார் மனைவியாவது? என்ற கேள்விக்குறி எப்போதும் இருக்கும். அதன் காரணமாக ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள்(கே) தமக்குள் பல பிரிவுகளை உருவாக்கினர் என்று இந்த சமூகத்தால் இன்னமும் நம்பப்படுகிறது. ஆனால் அது முற்றிலும் உண்மை அல்ல.  Gay ஆண்களை Top, Bottom, Versatile என பாகுபடுத்தி அனுபவிப்பது Bisexual மற்றும் Bi-curious Straight ஆண்களும் ஆகும். உண்மையில் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களுக்குள் அப்படி ஒரு பிரிவினையே வேண்டாம் என்கிறார்கள் பங்களாதேஷைத்(Bangladeshi) சேர்ந்த Abid Ahsan, Shohan ஓரினச்சேர்க்கை தம்பதிகள்.

ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?

தன்னினச் சேர்க்கையாளர்கள் ஒரு Straight பெண்ணை அவ்வளவு எளிதில் திருமணம் செய்து கொள்ளமாட்டார்கள். Gay/Bisexual ஆண்களின் வீட்டில் திருமணப் பேச்சை ஆரம்பிக்கும் போதே அவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது போன்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஓர் ஆணுக்கு கிடைக்குற மதிப்பும் மரியாதையும் அவனுக்கு பொண்டாட்டி புள்ளை குட்டிங்க எல்லாம் இருக்கான்னு பார்த்துட்டுத்தான் இந்த சமூகம் நமக்குத் தருது. குறிப்பிட்ட வயதை தாண்டும் வரை தலைவலி தான். நாம தான் எல்லோரும் நம்ம சொந்தம்ன்னு பைத்தியக்காரத்தனமா நம்பிட்டு இருக்கோம். அவங்க நம்மோட வாழ்க்கைல இருக்குற நெகட்டிவ் மட்டும் தான் பார்க்குறாங்க. அதுக்குப் பின்னாடி இருக்குற தியாகங்களை பார்க்குறது இல்ல. ஒரு சில அனுபவசாலிகளின் சோக கதையை கேட்ட பிறகுதான் புரிகிறது Bisexual Guys மட்டும் இல்லாம பல Gays கூட சமூகத்துக்காக ஒரு கல்யாணம் பண்ணிட்டு, யாருக்கும் தெரியாத நிழல் வாழ்க்கையை ஏன் வாழுறாங்கன்னு. நமது சமூகத்தில் உள்ள ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடுள்ள ஆண்கள் சந்திக்கும் மிகப்பெரிய உளப்பிரச்சனையே, அவர்களின் குடும்பத்தாருக்கு தமது உணர்வுகளை புரிய வைப்பது தான். என்ன தான் தலைகீழாக நின...

ஒரு ஆண்யை கரெக்ட் பண்ணுவது எப்படி?

இது சமூகத்தில் உள்ள ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களின் சொந்த அனுபவங்களை வைத்து உருவாக்கப்பட்ட பதிவாகும். பொது இடங்களில் வைத்து கலவியில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் உங்களால் பொது இடங்களில் வைத்து கலவியில் ஈடுபட ஆர்வமுள்ள ஆண்களை இனங் கண்டு அவர்களை அணுகி தனியாக அழைத்துச் செல்ல முடியும். பொதுவாகவே Gay ஆண்களிடம் ஒரு உள்ளுணர்வு சார்ந்த Gay Radar இருக்கும். அது ஒரு வகை உணர்ந்திறன். தம்மைச் சூழ யாராவது Gay அல்லது Bisexual ஆண்கள் உள்ளனரா என்பதை நாய்கள் மொப்பம் பிடிப்பது போல அவர்களால் உணர முடியும். "டேய்! மொசப்புடிக்கிற நாயை மூஞ்சியை பாத்தாலே தெரியும்" (முயல் பிடிக்கும் நாயை முகத்தைப் பார்த்தாலே தெரியும்) என்பார்கள். அது போல ஒரு ஆண்யைப் பார்த்தால் அவருக்கு ஆண்கள் மீது ஈர்ப்பு உள்ளதா? இல்லையா? என்பதை அவர்களால் அவனின் கண்களைப் பார்த்தே சொல்ல முடியும். என்ன தான் ஊருக்கே உத்தமனாக வேஷம் போட்டாலும் அவர்களின் கண்கள் காட்டிக் கொடுத்து விடும். ஆனால் இது எல்லா ஆண்களுக்கும் பொருந்தாது. சிலருடன் நெருங்கிப் பழகும் போது தான் அதனை அவர்களின் கண்களில் பார்க்க முடியும். அடி மேல் அடி வைத்தால் அம...

சமூகத்தில் பிரபலமாகும் இன்ப்ளுயன்சர் விபச்சாரம்

சமூகவலைத்தளங்களில் பிரபலமாவது தற்காலத்தில் மிகவும் இலகுவான விடையமாகி விட்டது. இதன் காரணமாகவே தற்காலத்தில் பல ஆண்கள் ஓவர் நைட்டில் ஒபாமா போல ஆகி விடுகிறார்கள். அதற்கு அவர்கள் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருப்பதும் ஒரு காரணம் எனலாம். ஒரு உண்மையான கலைஞன் பல வருடங்களாக கஷ்டப்பட்டு கட்டும் தனது சமூகவலைத்தள கோட்டையை ஒரு அழகாக, கவர்ச்சியான ஆண்/பெண் ஓவர் நைட்டில் கட்டி விட முடியும். அதற்கு கொஞ்சம் ஆடைகளில் இறக்கம் காட்டினால் போதும். இதனை நமது சமூகத்தில் உள்ளவர்கள் தவறாக கருதினாலும் Social Media நிறுவனங்கள் இதனை வரவேற்கவே செய்கின்றன. அதற்கு உங்கள் Instagram Account இற்குச் சென்று "Search and Explore Tab" இற்கு சென்றாலே போதும். உங்கள் இச்சையின் வெளிப்பாடு துலங்கிவிடும். அந்தளவுக்கு காமம் தான் சமூகவலத்தளங்களை ஆழ்கின்றது. நீங்கள் சில வேளைகளில் சில Instagram Influencers களை தனியாக ஊர் சுற்றுவதை அவதானித்திருக்கலாம். அவர்கள் குறிப்பிட்ட சில இடங்களுக்கு அடிக்கடி போவதும், ஆனால் அங்கு ஹோட்டலில் தங்குவது பற்றியும் மாத்திரம் Update போடுவதை அவதானித்திருக்கலாம்.  அவர்கள் என்ன தேவைக்காத அந்த ஊருக்க...