தற்காலத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் மத்தியில் Looks, Status, Money & Fancy stuff போன்றவற்றிற்கே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது ஒரு தனி நபரின் விருப்பு வெறுப்புடன் சம்பந்தப்பட்ட விடையம் ஆதலால் இதனை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும்.
ஆனால் உங்களை ஆசை காட்டி ஏமாற்றிப் பிழைப்பதற்கென்றே ஒரு கூட்டமும் இந்த சமூகத்தின் மத்தியில் உலாவருகிறது. அநேகமான அவர்கள் வாழ்க்கையில் வெறுத்துப் போன Bisexual ஆண்களாகத்தான் இருப்பார்கள்.
Grindr போன்ற துணை தேடும் சமூகவலைத்தளங்கள் பற்றி அநேகமானவர்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும். அவ்வாறான சேவைத்தளங்களின் மூலம் உங்களைத் தொடர்பு கொண்டு தான் ஒரு Agent என்று அறிமுகமானால், மிகவும் உசாராக இருக்க வேண்டும். இவ்வாறான தளங்களில் இருக்கும் Agent கள் உண்மையான Agent கள் இல்லை.
அவர்கள் உங்களுக்கு "Gym-Fit" ஆண்கள், மற்றும் திரைப்பட/தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் நடிகர்கள் "TV Serial Actors" படங்களை அனுப்பி இவர்கள் உங்களுடன் காசுக்குப் படுக்க தயாராக இருக்கிறார்கள் என்பார்கள்.
என்ன தான் தமிழ் சினிமா, டீவி சீரியல் நடிகர்கள், Model கள் இவ்வாறு காசுக்கு படுப்பதாக நாம் அரசல் புரசலாகக் கேள்விப்பட்டாலும் அவை எந்தளவுக்கு உண்மை என்று யாருக்கும் தெரியாது. அநேகமாக அவை ஒரு குறிப்பிட்ட நடிகர்/நடிகை மீது சேறு பூசுவதற்காக பரப்பப்படும் வதந்திகளாகும்.
இவ்வாறு உங்களை யாராவது தொடர்பு கொண்டு இந்த நடிகரை ஏற்பாடு செய்து தருவதாகச் சொன்னால் நம்ப வேண்டாம். உங்களை அவர்கள் ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்பதை ஆரம்பத்திலேயே உணரவும்.
அந்தப்பக்கம் யார் இருந்து உங்களுடன் Chat பண்ணுகிறார்கள் என்பதையே எம்மால் தெரிந்து கொள்ள முடியாத நிலையில், அவர்களை நம்பி காசு அனுப்பினால் அவ்வளவு தான்.
அதே நேரம் Commercial என Profile இல் குறிப்பிட்டிருக்கும் நபர்களிடம் இருந்து ஒதுங்கியிருக்க முயற்சியுங்கள். காமம் உங்கள் கண்களை மறைக்கலாம். அவர்கள் சொல்லும் ஆசை வார்த்தைகளில் நீங்கள் மயங்கலாம். ஆனால் பிறகு பின்னாடி பெரிய ஆப்பாக சொருகி விடுவார்கள்.
ஒரு நடிகரைப் பார்த்து இவர் Gay அல்லது Bisexual என இலகுவாக சொல்லி விட முடியுமா? இல்லை தானே! அதே போல அவரைப்பற்றிய சில விடையங்களை நாம் தெரிந்து வைக்காது இருப்பதே நல்லது. இது தொடர்பாக, வீணாக அந்த நடிகரைத் தொடர்பு கொண்டு எதுக்கு வம்பை விலை கொடுத்து வாங்கனும்?
எப்படி இவ்வாறான தளங்களில் உள்ள போலி முகவர்களை இனங்காண்பது?
1. முதலில் உங்களுடன் Chat பண்ணுபவரின் படத்தை அனுப்பச் சொல்லுங்க.
2. புகைப்படம் வந்ததும், Whatsapp Number ஐயும் அனுப்ப சொல்லுங்க.
3. பிறகு Whatsapp வீடியோ Call இல் நேருக்கு நேர் பார்த்து பேச முயற்சியுங்கள். Fake Agents இதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
4. அப்படியே வீடியோ Call இல் நேருக்கு நேர் பார்த்து பேசினால், அடுத்த முறை அந்த நடிகரை சந்திக்கும் போது உங்களுக்கு வீடியோ Call எடுக்கச் சொல்லுங்க. இல்லனா உங்களுக்கு ஒரு பிறந்த நாள் வாழ்த்து Video Message யை அந்த நடிகரை வைத்து, உங்கள் பெயரைச் சொல்லி பேசி Record செய்து அனுப்பச் சொல்லுங்க.
5. காசை கையில் தருவதாக சொல்லுங்க. வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையை மாத்திரம் முன்பணமாக(Advance) செலுத்தலாம்.
உங்களுக்கு இந்த மாதிரி படுக்கும் பழக்கம் இருந்தால், Dealing பிடித்திருந்தால் பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்ளவும்.
I like the acter
ReplyDelete