Skip to main content

Posts

Showing posts from January, 2024

ஓரினச் சேர்க்கையாளர்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா?

ஒருவரின் Sexual Orientation யை வைத்து ஒருவரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா? இல்லையா? என்று தீர்மானிக்க முடியாது. Gay ஆண்களுக்கும் Bisexual, Straight ஆண்களுக்கும் வெளிப்படையாக எந்தவொரு வித்தியாசமும் இருக்காது. அவர்களுக்கும் எல்லா ஆண்களைப் போல ஆண்குறியும், விதைகளும் இருக்கும். அவர்களின் விதைகளில் உற்பத்தியாகும் விந்தினை வைத்துக் கூட பெண்களைக் கர்ப்பமாக்கி குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். வாடகைத் தாய் முறைகள் மூலமும் ஓரினச்சேர்க்கை ஆண்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். ஓரினச்சேர்க்கையாளர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஓரினச்சேர்க்கையாளர்களாக இருக்காது. ஏன் என்றால் ஓரினச்சேர்க்கை என்பது இயற்கைத் தெரிவு, தொற்று நோய் அல்ல. Gay(கே/ஆண் ஓரினச்சேர்க்கையாளர்) ஆண்களால் ஒரு பெண்ணை கர்ப்பமாக்க முடியுமா? முடியும். அவர்கள் மாற்றுப்பாலினத்தவர்கள்(திருநங்கை/திருநம்பி/Transgender) அல்ல. இவர்கள் சாதாரணமான ஆண்கள். ஆனால் ஆண்கள் மீது மாத்திரம் இனக்கவர்ச்சி இருக்கும். இவர்களால் பெண்களுடன் கலவியில் ஈடுபட்டு திருப்தியடைய முடியாது. Lesbian(லெஸ்பியன்/பெண் ஓரினச்சேர்க்கையாளர்) பெண்களால் கர்ப்பமாக முடி...