Skip to main content

Posts

Showing posts from December, 2023

ஓரினச் சேர்க்கையாளர்கள் செக்ஸ் செய்ய அலைபவர்களா?

Straight ஆண்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடுள்ள ஆண்களை, தன்னினச்சேர்க்கையாளர்களை(Gay/Bisexual/Bicurious) நண்பர்களாக்கிக் கொண்டால் ஆபத்தா? நிச்சயமாக இல்லை. ஒருவருடைய சம்மதம் இல்லாமல் செக்ஸ் வைத்துக் கொள்வது தவறாகும். அது கற்பழிப்புக்குச் சமம். அவர்களும் சாதாரண ஆண்கள் தான்.  ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என்பார்கள். நட்பு என்ற போர்வையில் நீங்கள் அவர்களுடைய நட்பை Misuse பண்ணாவிட்டால், அவர்களின் உணர்வுகளுடன் விளையாடாவிட்டால், அவர்கள் நண்பர்களாகவே உங்களுடன் வாழ்க்கை முழுவதும் வருவார்கள். ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக மாத்திரம் இருக்க முடியும், இல்லையா? அது போல தான் இதுவும்.  நீங்கள் முழுமையான Straight ஆண்காக இருந்து, ஒரு வேளை அவர்களுக்கு உங்கள் மீது ஈர்ப்பு ஏற்பட்டால் கூட அதனை அவர்களால் மறைக்க முடியாது வெளிக்காட்டி விடுவார்கள், அல்லது உங்களை விட்டு சற்று விலகி நிற்க ஆரம்பித்து விடுவார்கள். Gay ஆண்களால் இன்னொரு தன்னினச்சேர்க்கையில் ஈடுபாடு உள்ள ஆண்யை இலகுவாக இனங்காண முடியும் . அவ்வாறான ஆண்களிடம் தமது விருப்பத்தை நேரடியாக தெரிவித்து விடுவார்கள். Closeted Gays, அதாவது சமூகத்திற்கு ...

நீங்கள் ஓரினச்சேர்க்கையாளராக எப்போது உணர்ந்தீர்கள்?

நீங்கள் வயது வந்ததன் பின்னர், உங்கள் வாழ்க்கையில் எப்போது உங்களுக்கு ஆண்களின் மீது மாத்திரம், அல்லது ஆண்களின் மீதும் பெண்களின் மீதும் செக்ஸ் ரீதியான ஈர்ப்பு உள்ளது என்பதை உணர்ந்தீர்கள். ஆண்களுக்கு ஆண்கள் மீது இனக்கவர்ச்சி, ஈர்ப்பு, காதல் ஏற்படுவது இயல்பான இயற்கையான ஒன்று. உங்கள் அனுபவத்தை Comment இல் பகிருங்கள். சமூகத்தில் உள்ள ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு உங்கள் அனுபவம் ஒரு பாடமாகவும் அமையலாம்.

ஓரினசேர்க்கையில் ஈடுபடுவது - புதிரா, புனிதமா?

ரொம்ப நாளாகவே ஓரினசேர்க்கை பற்றி பல கேள்விகளும், சந்தேகங்களும் ஓரினசேர்க்கையாளர்கள் மத்தியிலும் மற்றவர்கள் இடமும் தொக்கி நிற்கிறது. தெரிந்தோ தெரியாமலோ இதில் ஈடுபடுபவர்கள் கூட ஒரு குற்ற உணர்வுடனே வாழ்கிறார்கள். ஆகவே இதை பற்றி கொஞ்சம் அடிப்படை அறிவு தேவைப்படுகிறது. 1. இது மனிதர்கள் மட்டுமின்றி 15௦௦ விலங்கு & பறவை இனங்களிலும் காணப்படும் சாதாரண நிகழ்வு என ஆராய்ச்சியாளர்கள் பதிகிறார்கள். அதனால இது இயற்கைக்கு மாறானது என்று யாரும் நினைக்க வேண்டாம். இதுவும் இயற்கையே. 2. மதங்கள் இதை கடுமையான குற்றமாக பார்க்கிறது என்பதும் உண்மையல்ல. இந்து மதத்தில் பல புராண இதிகாச பாத்திரங்கள் ஓரினசேர்க்கையில் (both Gay & Lesbian) ஈடுபட்ட குறிப்புகள் உள்ளன. இதை தண்டனைக்குரிய குற்றமாக சொல்லவில்லை.  கிறிஸ்துவ மதத்தில் இயேசு இதை குற்றமாக குறிப்பிடவில்லை. பின் வந்த அவர் சீடர்கள் மட்டுமே இதை குற்றம் என சொல்லி உள்ளனர்.   இஸ்லாம் மதத்தை பொறுத்த வரையில் நபிகள் நாயகம் நேரடியாக இதை குற்றம் என்று எங்கும் சொல்லவில்லை. புனித குரானிலும் இதைபற்றி நேரடியாக சொல்லவில்லை. திருமணத்தின் பின்னரான வரம்பு மீறிய உறவ...