தன்னினச்சேர்க்கையாளர்கள் உண்மையில் காதலிப்பார்களா? அல்லது அவர்களைப் பொறுத்தவரையில் காதல் என்பது வெறும் நடிப்பா, ஐந்து நிமிட சந்தோஷமா?
காதல் இல்லாமல் சேர்க்கை ஏது? அனைத்துக்கும் அடிப்படை காதல் தான். ஆணும் பெண்ணும் எப்படி காதலிப்பார்களோ அது போல ஓரினச்சேர்க்கையாளர்களும்(Gay, Bisexuals and other LGBT Members) உருகி உருகிக் காதலிப்பார்கள்.
இந்த நாட்டின் சட்ட திட்டங்கள் மாத்திரம் அவர்களுக்கு சாதகமாக இருந்தால் அவர்கள் வெளிப்படையாகவே திருமணமும் செய்து வாழ்வார்கள்.
Tips: ஒருத்தரோட Consent இல்லாம ஹிந்தி உட்பட எதை திணித்தாலும் தப்பு தான். ஆனால் பல மொழிகளை தெரிந்து வைத்திருந்தால் உங்கள் தொடர்பு எல்லையை மேலும் விரிவாக்கலாம். ஒன்னுக்கு நாலு மொழிகள் தெரிந்திருந்தால் உங்கள் காதல் தேடலைக் கூட எல்லை தாண்டியும் மேற்கொள்ளலாம்.
ஏன் என்றால் பொதுவாகவே தன்னினச்சேர்க்கையாளர்களுக்கான துணை தேடலில் பல வரம்புகள்(limitations), தடைகள் ஒவ்வொரு சமூகத்திலும் உள்ளன.
இந்த சமூகம் இவர்களின் காதலை ஆதரிப்பதில் தயக்கம் காட்டுவதாலேயே அநேகமான ஆண்களின் ஓரினச்சேர்க்கைக் காதல் பாதியில் முறிவடைகிறது.
சில தன்னினச்சேர்க்கை(Gay/Bisexual/LGBT) தம்பதியினரின் தவறான அணுகல்கள் கூட அவர்களின் உறவுகளில் முறிவு ஏற்படுவதில் செல்வாக்குச் செலுத்துகின்றன.
உதாரணமாக: காதலிக்கும் நபருக்குத் தெரியாமல் இன்னொருவருடன் செக்ஸ் வைத்துக் கொள்வது, இருவருக்கிடையில் இன்னொருவரை கொண்டு வருவது, அந்தரங்க விடையங்களை Record செய்து Online இல் பணம் சம்பாதிப்பது, காதலை மறந்து காமத்துக்கு முன்னுரிமை கொடுப்பது, ஒவ்வொரு நாளும் செக்ஸ் வைத்துக் கொள்வது, செக்ஸை தாண்டி எதையும் யோசிக்காமல் உறவு வைத்துக் கொள்வது மேலும் பல.
பல தடைகளைத் தாண்டியும் ஒன்றாக சேர்ந்து வாழும் ஆண் ஓரினக் காதல் ஜோடிகளின் எண்ணிக்கை தற்சமயம் முன்னரை விட அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த முன்னேற்றம் வரவேற்கத்தக்கது. அவர்களின் காதலுக்கு நீங்களும் ஆதரவை தர முன்வாருங்கள்.
ஆண் ஓரினச்சேர்க்கை/கே காதல் தொடர்பாக உங்களுக்குத் தோன்றும் கவிதைகள், நீங்கள் பார்த்து ரசித்த கவிதைகளை இங்கே Comment பண்ணுங்க.
Comments
Post a Comment