Sexual Orientation, அதாவது ஒருவருடைய பாலியல் நாட்டம்/ஈர்ப்பு என்பது அவரது பால்நிலை(Gender) மற்றும் அவரது பாலியல் வல்லமை(Sex Drive, Stamina, Erection) போன்றவற்றுடன் நேரடித் தொடர்பு அற்றதாகும். Sexual Orientation ஆனது காதல், இன ஈர்ப்பு/இனக்கவர்ச்சி போன்றவற்றுடனே நேரடியாக சம்பந்தப்படுகிறது. ஒருவரது உடலில் காமத் தீயை பற்ற வகைக்கும் காரணியாகவும் இதனைக் கருதலாம். ஆனால் கட்டாயம் இதனால் மட்டும் தான் ஒருவருடைய பாலியல் ஆசைகளை தூண்டி அவரை கிளர்ச்சியடையச் செய்ய முடியும் என்று முடிவு செய்ய முடியாது. பல்வேறு காரணங்களினால் ஒரு ஆணுக்கு அவனது ஆண்குறியில் விறைப்பு ஏற்படாவிட்டால், அல்லது ஆர்கஸம் அடைந்து, விந்தினை வெளியேற்ற முடியாவிட்டால் அவனை ஆண்மையற்ற ஆணாக கருதுவர். Erectile Dysfunction(ED) மாத்திரம் அல்ல, குழந்தை உருவாக்கக் கூடிய அளவுக்கு ஆரோக்கியமான விந்தினை உற்பத்தி செய்ய முடியாத ஆண்களையும் ஆண்மையற்றவர்களாகவே இந்த சமூகம் பார்க்கிறது. ஆகவே ஆண்மையற்றவர்கள் என்றால் ஒரு குழந்தையை உருவாக்கும் வல்லமை அற்றவர்கள் எனலாம். குறிப்பு: சில ஆண்மையற்ற ஆண்களுக்கு பாதியளவிலோ அல்லது முழுமையாகவோ கூட ஆண்குறியில் விறைப்...
a blog to understand the Tamil Gay, Bisexual and LGBT lifestyle around the World. Explore the ways to communicate with Tamil Homosexual Friends, and Life Partner Searching Platforms online. Even though it is made for Gays and Bisexual Men, it is not limited to them. We stand against Homophobia, Biphobia, Transphobia.