Sexual Orientation, அதாவது ஒருவருடைய பாலியல் நாட்டம்/ஈர்ப்பு என்பது அவரது பால்நிலை(Gender) மற்றும் அவரது பாலியல் வல்லமை(Sex Drive, Stamina, Erection) போன்றவற்றுடன் நேரடித் தொடர்பு அற்றதாகும்.
Sexual Orientation ஆனது காதல், இன ஈர்ப்பு/இனக்கவர்ச்சி போன்றவற்றுடனே நேரடியாக சம்பந்தப்படுகிறது. ஒருவரது உடலில் காமத் தீயை பற்ற வகைக்கும் காரணியாகவும் இதனைக் கருதலாம். ஆனால் கட்டாயம் இதனால் மட்டும் தான் ஒருவருடைய பாலியல் ஆசைகளை தூண்டி அவரை கிளர்ச்சியடையச் செய்ய முடியும் என்று முடிவு செய்ய முடியாது.
பல்வேறு காரணங்களினால் ஒரு ஆணுக்கு அவனது ஆண்குறியில் விறைப்பு ஏற்படாவிட்டால், அல்லது ஆர்கஸம் அடைந்து, விந்தினை வெளியேற்ற முடியாவிட்டால் அவனை ஆண்மையற்ற ஆணாக கருதுவர். Erectile Dysfunction(ED) மாத்திரம் அல்ல, குழந்தை உருவாக்கக் கூடிய அளவுக்கு ஆரோக்கியமான விந்தினை உற்பத்தி செய்ய முடியாத ஆண்களையும் ஆண்மையற்றவர்களாகவே இந்த சமூகம் பார்க்கிறது. ஆகவே ஆண்மையற்றவர்கள் என்றால் ஒரு குழந்தையை உருவாக்கும் வல்லமை அற்றவர்கள் எனலாம்.
குறிப்பு: சில ஆண்மையற்ற ஆண்களுக்கு பாதியளவிலோ அல்லது முழுமையாகவோ கூட ஆண்குறியில் விறைப்பு ஏற்படும். ஆனால் அவர்களுக்கு விந்து வெளியேறுவதில் பிரச்சனை இருக்கும்.
அதற்காக அவன் Gay/Bisexual ஆகி விடமாட்டான். Gay/Bisexual ஆண்களுக்கு ஆண்குறியில் விறைப்பு இருக்கும். அதே நேரம் Gay/Bisexual ஆண்களால் நிச்சயமாக ஒரு குழந்தைக்கு தந்தையாக முடியும்.
உங்களுக்குத் தெரியுமா? Gay/Bisexual ஆண்களின் பிரதான பாலியல் செயற்பாடே குண்டியடிப்பதாகும். பெண்களை குண்டியடிக்கும் Straight ஆண்களால் மாத்திரமே, அதற்கு அவர்களின் ஆண்குறி எந்தளவுக்கு விறைப்புடன் இருக்க வேண்டும் என்பது புரியும். ஆகவே Gay/Bisexual ஆண்களை ஆண்மையற்றவர்களாக பார்ப்பதை தவிர்க்கவும்.
ஆண் மலட்டுத்தன்மைக்கும் அவர்களின் Sexual Orientation இற்கும் நேரடித் தொடர்புகள் எதுவும் இல்லை. Straight, Gay, Bisexual ஆண்கள் என எந்த ஆணுக்கும் மலட்டுத்தன்மை பிரச்சனை இருக்கலாம்.
மலட்டுத்தன்மை பிரச்சனை உள்ள ஆண்கள், ஆண்குறி விறைப்படைவதில் பிரச்சனை உள்ள ஆண்கள் எப்படி தமது மனைவியை பாலியல் ரீதியாக திருப்திப்படுத்த முடியும்?
மலட்டுத்தன்மை ஏற்பட்ட ஆண்கள் அவசியம் இன்னொரு ஆணின் உதவியுடனேயே தமது மனைவியை கர்ப்பமாக்க முடியும். அதற்காக அவசியம் உங்கள் மனைவியை இன்னொரு ஆணுடன் கலவியில் ஈடுபட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றில்லை. Sperm Donors களின் உதவியுடன் செயற்கை முறை கருத்தரிப்புகளை மேற்கொள்ளலாம்.
உங்களுக்கு உங்கள் ஆண்குறியில் விறைப்பு ஏற்படாவிட்டாலும், உங்கள் மனைவி மீது காதல் இருக்கும். மனைவியை உங்கள் நாக்கையும், விரலையும் வைத்துக் கூட பாலியல் ரீதியாக திருப்திப்படுத்த முடியும்.
அவசியம் ஒரு விறைத்த ஆண்குறியை வைத்து மாத்திரம் தான் பெண்ணை திருப்திப்படுத்த முடியும் என்றில்லை. உங்களால் Sex Toys களையும் இதற்காகப் பயன்படுத்த முடியும்.
அதற்காக நீங்கள் Lesbians பயன்படுத்தும் Strap-on Dildo களை அணிய முடியும். Strap-on Dildo வை பயன்படுத்தி, உங்கள் ஆண்குறி விறைப்படையாவிட்டாலும் உங்கள் மனைவியை பாலியல் ரீதியாக திருப்திப்படுத்த முடியும்.
Jaggi (2022) Punjabi திரைப்படத்தை இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கியுள்ளார்கள். அந்தத் திரைப்படத்தின் கதாநாயகனுக்கு ஆண்குறி விறைப்படைவதில் பிரச்சனை ஏற்படுகிறது. ஆனால் ஆண் மலட்டுத்தன்மை தொடர்பான அறிவு அவனுக்கு இல்லாமையால், நண்பர்களால் தவறாக வழி நடத்தப்படுகிறான். அவனை எல்லோரும் தன்னினச் சேர்க்கையாளனாக அடையாளப்படுத்துகின்றனர். அவனை பலர் பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர். அவன் தன் நிலைமையை புரிந்து கொண்டு, அந்த துன்பகரமான வாழ்க்கையை விட்டு எப்படி வெளியேறிகிறான் என்பதை மிகவும் சோகமாக காட்சிப்படுத்தியிருப்பர்.
Keywords: தன்னினச் சேர்க்கையாளர்கள் ஆண்மையற்றவர்களா? Impotent, Impotence, Sterile, Sterility, ஆண் மலட்டுத்தன்மை, Solution for Male Impotence, ஆண்மையற்ற ஆண்களுக்கான தீர்வுகள்
Comments
Post a Comment